ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தி விழா

vinayagar
Last Modified வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (16:11 IST)
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு உற்சவர் விநாயகர் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.கரூர், மாரியம்மன் ஆலயத்தின் அருகே, தேர்வீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, விநாயகரின் வாகனமான எலி வாகனத்தில், உற்சவர் பல வகை வண்ண மலர்களினாலும், பலவகை வண்ண ஆபரணங்களினாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனைகள், கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, சோல சம்காரங்களுடன், கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் அருள் பெற்றனர்.

சி.ஆனந்தகுமார்

வீடியோவை காண


இதில் மேலும் படிக்கவும் :