1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Historical Parasurameswarar Temple in Ayanavaram, Chennai

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

பரசுராமலிங்கேசுவரர்
சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள பரசுராமலிங்கேசுவரர் கோயில், மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் வழிபடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். இந்த சிவன் கோயில் பண்டைய காலத்தில் "அயன்புரம்"  என்றும் அழைக்கப்பட்டது.
 
இங்கு மூலவரான பரசுராமேசுவரர் சுயம்பு மூர்த்தியாக கருவறையில் எழுந்தருளியுள்ளார். இவர் தீண்டாத் திருமேனி என்று போற்றப்படுகிறார். அதாவது, அர்ச்சகரின் கரம்கூட லிங்கத்தை தொடுவதில்லை. இவருக்கு நீர், இளநீர், பன்னீர் ஆகிய மூன்று பொருட்களால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
 
இங்குள்ள முருகப் பெருமான், பிரம்ம சாஸ்தா கோலத்தில் காட்சியளிக்கிறார். அம்பாள் பர்வதாம்பிகை சந்நிதியில் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலம் திருமண கோலத்தில் இறைவன், இறைவி காட்சி தரும் அமைப்பை கொண்டுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?