செவ்வாய், 5 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
Written By

விநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது எப்படி தெரியுமா...?

இந்திரனது சபையில், மகாஞானியான பராசர முனிவரின்  காலை மிதித்துவிட்டான். அதனால் வெகுண்ட அவர் அவனை எலியாக  மாற சாபம் தந்தார். எலியாக மாறிய கந்தருவன் சீற்றம் கொண்டு முனிவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தான். 
இந்நேரத்தில் தான் பராசர முனிவரின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அவரை பரஷர் ரிஷியும் அவரின் மனைவியுமான வத்சலாவும் கவனித்துக்  கொண்டனர். ராட்சச எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார். பராசர  முனிவரின் ஆசிரமத்தை பாழ்படுத்தி விட்டான்.
 
பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார். கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு  எலி வடிவில் வாகனமாக ஆனான். அன்று முதல் விநாயகர் பெருமானுக்கு 'மூஷிக வாகனன்’ என்று பெயர் வந்தது.