1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தி விழா!

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தியையொட்டி மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.
விநாயகர் சதூர்த்திக்கு முன்னர் வரும் மஹா சங்கடஹர சதூர்த்தி என்பதினால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால்  அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம். மேலும், ஆனை முகனின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.

ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம்  இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர். இந்நிலையில் மகா சங்கடஹர சதூர்த்தி நிகழ்ச்சியானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
 
கரூர் மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில், மஹா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு, மூலவர் மற்றும், உற்சவர் சித்தி விநாயகருக்கும், பரிவாரதெய்வங்களான காயத்தி தேவிக்கும், விஷ்ணு துர்க்கை, நவக்கிரஹங்கள், விநாயகரின் வாகனத்திற்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு  அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கோயில் குருக்கள் வசந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.