வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. க‌ட்டுரைக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜூன் 2018 (14:00 IST)

அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் தங்க அலங்காரம்

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சஷ்டியை முன்னிட்டு, முருகனுக்கு தங்க அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று முருகன் அருள் பெற்றனர்.



கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயமானது தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்,


இந்நிலையில், ஆனி மாத சஷ்டியையொட்டி, முருகனுக்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டதோடு, பல வண்ண மலர்களால், தங்க ஆபரணங்கள் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, உற்சவர் விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கும், விஷ்ணு துர்க்கைக்கும், அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மாவிற்கும், நவக்கிரகங்களுக்கும் விஷேச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முருகனுக்கு மஹா தீபாராதனை, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கோயில் குருக்கள் வசந்த் சர்மா ஜி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் முருகன் புகழாரம் தமிழில் பாடியும், பக்தியுடன் பாடியும் முருகன் அருள் பெற்றனர்.


ஆனந்தகுமார்