கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயம்: மஹா சங்கடஹர சதூர்த்தி விழா!!

Last Updated: திங்கள், 2 ஜூலை 2018 (12:09 IST)
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு, மூலவர் விநாயகருக்கு பலவகை அபிஷேகங்கள் - தங்க கவசம் சாத்தப்பட்டு, மஹா தீபாராதனை நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று விநாயகர் அருள் பெற்றனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில் மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர  சதூர்த்தியை முன்னிட்டு, உற்சவர் மற்றும் மூலவர்களுக்கு மாவு பொருட்களை கொண்டு அபிஷேகங்கள், சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் தங்க அங்கி பொறுத்தப்பட்ட மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டதோடு, மஹா தீபாராதனை மற்றும் நட்சத்திர ஆரத்தி உள்ளிட்ட தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் நடைபெற்ற மஹா தீபாராதனையில்  பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று விஸ்வகர்மா சித்தி விநாயகர் அருள் பெற்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :