வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 டிசம்பர் 2025 (18:30 IST)

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?
ஆரோக்கியம் மற்றும் முக்தி அருளும் திருத்தலங்களில் முக்கியமான ஒன்று, திருச்சிக்கு அருகே உள்ள பாடாலூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் திருக்கோயில் ஆகும். 
 
இங்குள்ள ஈசன், ரத்தினம் போல் ஜொலிக்கும் திருமேனியுடையவராக காட்சி தருவதால் 'சுத்தரத்னேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். தாயார் அகிலாண்டேஸ்வரி ஆவார்.
 
இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு, இது சிறுநீரக பிரச்னைகளை போக்கும் தலம் என்பதுதான். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளும் இங்கு பிரார்த்தனை செய்து பலன் பெற்றுள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். சோழப் பேரரசர் ராஜராஜ சோழன்கூட இங்கு வழிபட்டுத் தன் நோயைப் போக்கிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
 
மேலும், இங்குள்ள நடராஜப் பெருமானின் திருமேனி, அபூர்வ வகை பஞ்சநதன கல்லால் ஆனது. இந்த கல் சூரிய கதிர்களின் ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டது என்பதால், இத்தலத்துக்கு வந்து வழிபட்டாலே ஆரோக்கியமும் செல்வமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
 
Edited by Mahendran