ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா செய்ய...!!

Andhra Style Brinjal masala
Sasikala|
சமைக்க தேவையானவை:
 
கத்தரிக்காய் - 250 கிராம்
வெங்காயம் - 3
புளி - சிறு எலுமிச்சை அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 கப்
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தேவையான அளவு

செய்முறை: 
 
முதலில் கத்தரிக்காய்களை கழுவி காம்பு நீக்கி நான்காய் கீறிக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து, தேங்காய் துருவல், அரிந்த வெங்காயம்  சேர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிதம் செய்து புளிக் கலவையை கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் வதங்கிய பின் கலவையை எடுத்து கீறிய கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும். வாணலி அல்லது பிரைபேனில் எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலா கலவையை அதன்மீது கொட்டி மூடிவைத்து மிதமான தீயில் வேகவைக்கவும்.
 
சிறிது நேரம் கழித்து கத்தரிக்காய்களை திருப்பி போடவும். எல்லாப் பக்கங்களும் வெந்தபின் எடுத்தால் அனைத்துவகை சாதத்துக்கு ஏற்ற சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் மசாலா தயார்.


இதில் மேலும் படிக்கவும் :