1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சூப்பரான சுவையில் நண்டு மசாலா செய்ய வேண்டுமா....?

தேவையான பொருட்கள்:
 
நண்டு - 1 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
மல்லி - 2 டீஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 - 4
தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் + 4 முந்திரி(விருப்பப்பட்டால்)
உப்பு - தேவைக்கு
கரம் மசாலா - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மல்லி இலை - ஒரு கைப்பிடியளவு.
தக்காளி - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 4
எண்ணெய் - 100 மிலி

செய்முறை: 
 
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதிவந்ததும் தண்ணீரை  வடிகட்டிவிடவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை கட் செய்து கொள்ளவும். 
 
வாணலியில் எண்ணெய் காயவைத்து வற்றல், கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைக்கவும். மிளகு, தனியா, சீரகம், சோம்பு லேசாக வறுத்துகொள்ளவும்.
 
மிக்ஸியில் மிளகு, சீரகம், தனியா, சோம்பு தூள் செய்து அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
 
வாணலியில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்ததும் நண்டை சேர்க்கவும். பின்னர் மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். உப்பு பார்த்து சேர்க்கவும், கொஞ்சம் கூடினாலும் கடுத்துவிடும்.
 
பின்பு அத்துடன் அரைத்த மசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் தெளிந்து கெட்டியானவுடன் இறக்கவும். சூப்பர் சுவையில் நண்டு மசாலா தயார்.