1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
பால் - 500 மி.லி. 
நெய் - 4 தேக்கரண்டி 
ஜவ்வரிசி - 1/2 கப் 
கண்டன்ஸ்டு மில்க் - 1/2 கப் 
சர்க்கரை - 1/2 கப் 
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி 
குங்குமப்பூ - 1/2 தேக்கரண்டி 
முந்திரி பருப்பு -  10 
திராட்சை -  10 காய்ந்த 
பாதாம் - உடைத்தது சிறிதளவு
பிஸ்தா பருப்பு - உடைத்தது சிறிதளவு

செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும். பால் காய்ந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து  சூடானதும், அரை கப் ஜவ்வரிசி சேர்த்து குறைவான தீயில் வறுக்கவும்.
 
இப்பொழுது ஜவ்வரிசி உப்பி வருவதை பார்க்கலாம். இளவரசி பொரிந்து வந்தபின்னர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 2 முதல் 3 நிமிடங்கள்  வைக்கவும். இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.  
 
பத்து நிமிடங்களுக்கு பின்பு ஜவ்வரிசி மென்மையாக வந்திருப்பதைப் பார்க்கலாம். இப்பொழுது மீண்டும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும் அதனுடன் காய்ச்சி  வைத்துள்ள பால் சேர்க்கவும். மேலும் அரை கப் சர்க்கரை, அரை கப் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.
 
அரைத்தேக்கரண்டி ஏலக்காய்த்தூள், அரைத்தேக்கரண்டி குங்குமப்பூ, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து  சூடானதும் 10 முந்திரி பருப்பு, 10 காய்ந்த திராட்சை, ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
 
பொன்னிறமானதும் பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து பாயசத்தில் கலக்கவும். சுவையான ஜவ்வரிசி பாயசம் தயார், இதனை இரண்டு  மணி நேரத்திற்குப் பிறகு பரிமாறினால் மேலும் சுவையாக இருக்கும்.