சுவை மிகுந்த கொ‌ண்டைக் கடலை குழ‌ம்பு செய்ய...!!

Kondakadalai kuzhambu
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
கொண்டக்கடலை - 250
வெங்காயம் - 100
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

செய்முறை:
 
கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து விடவும். கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றிக் கா‌‌ய்‌ந்தது‌ம் கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அத்துடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு நன்கு வதக்கியதும். ‌த‌க்கா‌ளியை‌ப் சேர்த்து நன்கு வதக்கவும்.
 
த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌‌மிளகா‌ய் தூ‌ள், தனியாத் தூள் ஆ‌கியவ‌ற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் ஊ‌றிய கடலையை போட்டு நன்கு கிளறிய பின்பு தண்ணீரில் புளியை கரைத்து அதில் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கு‌க்கரை மூடி 5  விசில் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவை மிகுந்த கொ‌ண்டை கடலை குழ‌ம்பு தயார். 


இதில் மேலும் படிக்கவும் :