சர்க்கரைவள்ளிக் கிழங்கு வடை செய்ய...!

தேவையானவை: வேக வைத்து, மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3  (நறுக்கிக் கொள்ளவும்), கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உப்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, கடலை மாவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

இந்தக் கலவையை ஆறியவுடன் வடைகளாகத் தட்டி, சூடான  எண்ணெயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொரித்தெடுக்கவும். இதை தோசைக்கல்லில் போட்டும் சுட்டு  எடுக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :