1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சத்துள்ள காய்கறி வடை செய்ய...!

தேவையான பொருட்கள் :
 
உளுந்தம்பருப்பு - 200 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
கேரட் துருவல் - ஒரு கப்
கோஸ் பொடியாக நறுக்கியது - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - ஒரு கப்
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 250 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
 
* உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, கேரட் துருவல், கோஸ், சோம்பு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை பட்டாணி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 
 
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து வடைகளாக  தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சூப்பரான காய்கறி வடை தயார்.
 
குறிப்பு:
 
நாம் விரும்பும் காய்களை பொடியாக நறுக்கி சேர்த்து வடை செய்யலாம். இந்த வடைக்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.