வியாழன், 19 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (15:27 IST)

மழை காலத்திற்கு ஏற்ற மிளகு குழம்பு செய்வது எப்படி?

மழை காலத்திற்கு ஏற்ற மிளகு குழம்பு செய்வது எப்படி? 
 
தேவையான பொருட்கள்: 
2 டேபிள் ஸ்பூன் மிளகு
1  டேபிள் ஸ்பூன் சீரகம்
கறிவேப்பிலை
நல்லெண்ணெய் 4 ஸ்பூன் 
கடுகு 1 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் 2
வெந்தயம் சிறிதளவு 
இஞ்சி ஒரு துண்டு 
பூண்டு 10 பள்ளு 
சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி 
 
முதலில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை இது மூன்றையும் போட்டு நன்றாக வறுத்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் தலைப்புக்கு எண்ணெய், கடுகு,காய்ந்த மிளகாய், வெந்தயம், இஞ்சி, பூண்டு , சின்ன வெங்காயம் கருவேப்பிலை, தக்காளி சாறு ஊற்றி அனைத்தையும் நன்றாக வதக்கவும். குழம்பு மிளகாய்த்தூள் 3 ஸ்பூன் போட்டு எண்ணையில் நன்றாக வதக்கவும். எலுமிச்சை அளவு புளி தண்ணி ஊற்றி நன்றாக சுண்டி வந்த பிறகு தேவையான அளவு உப்பு போட்டு இறக்கி சுடச்சுட பரிமாறவும். இது மழை காலத்தில் சளி, இருமலுக்கு ஏற்றது.