வியாழன், 21 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:40 IST)

தீபாவளி ஸ்பெஷல்: மிருதுவான மைசூர் பாக் எப்படி செய்வது...?

Mysore pak
தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
வெண்ணெய் - 1/2 கிலோ
தண்ணீர் - சிறிதளவு



செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் வெண்ணெய்யை உருக்க வேண்டும். நெய் பக்குவம் இல்லாமல் வெண்ணெய் கரையும்படி இருத்தல் வேண்டும். கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும்.

வாணலியில் சர்க்கரை மூழ்கும்படி தண்ணீர் விட்டு சர்க்கரை கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி ஒரு கம்பி பதம் வந்ததும் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். இதனை கட்டி இல்லாமல் நன்கு கிளறவும். இடையிடையே இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.

அந்த கலவை நெய் முழுவதையும் இழுத்துக்கொண்டு ஓரங்களில் பொரிந்து வரும் பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி லேசான சூட்டில் வில்லைகள் போட்டால் அற்புத சுவையில் அட்டகாசமான மிருதுவான மைசூர் பாக் தயார்.

குறிப்பு: சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.

Edited by Sasikala