ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:31 IST)

சுவையான முறையில் உளுந்து வடை செய்ய !!

Ulundu vadai
தேவையான பொருள்கள்:

உளுந்தம் பருப்பு - 250 கிராம்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
சமையல் சோடா - 1 ஸ்பூன்
வெங்காயம் - 50 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 2 கீற்று
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

உளுந்தம் பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். பிறகு அதை மிக்சி ஜாரில் நன்றாக அரைத்து எடுக்கவும். வெங்காயம், பச்சை மிளகு மற்றும் இஞ்சி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மிளகை பொடியாக தட்டி எடுத்து கொள்ளவும்.

அரைத்த உளுந்தம் பருப்பு மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடித்த மிளகு,கொத்தமல்லி, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், அதில் சிறு உருண்டைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள். இப்போது சுவையான உளுந்த வடை தயார். உளுந்த வடைக்கு, தேங்காய் சட்னி செம்ம காம்பினேஷன் நன்றாக இருக்கும்.