ருசியான பிரண்டை துவையல் செய்ய !!
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 1 கட்டு
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6
தேங்காய் - 1 துண்டு
புளி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், தேங்காய் என ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டையை நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சத்தான பிரண்டை துவையல் தயார்.
பிரண்டைத் துவையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பிரண்டைத் துவையலை 4 நாட்கள் வரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்.