ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (12:09 IST)

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு மோதகம் செய்ய !!

Moong dal modak
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 2
பச்சரிசி மாவு - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு



செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதனை குக்கரில் போட்டு, 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்பு வேகவைத்த பாசிப்பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெல்லத்தை நீரில் போட்டு கரைய விட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அந்த பாகுவை கொதிக்க விட வேண்டும். பின் அதில் மசித்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்கினால், பூரணம் தயார்.

பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, அதில் நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். பின் அதில் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கரண்டியால் கிளறி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். சூடு ஆறியதும், கைறால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பிசைந்த மாவை சரிசமமாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். பின் ஒரு மாவு உருண்டையை எடுத்து கிண்ணம் போன்ற வடிவில் தட்டிக் கொண்டு, அதன் நடுவே ஒரு பூரண உருண்டையை வைத்து, மோதகம் போன்ற வடிவில் நன்கு மூடிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் மோதகம் போன்று செய்து, இட்லி தட்டில் வைத்து, 8 முதல் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு மோதகம் தயார்.