1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
  4. Ganesha Chaturthi Special: Make everyone's favorite Laddu!!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அனைவருக்கும் பிடித்தமான லட்டு செய்ய !!

Laddu
தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 200 கிராம்
சர்க்கரை - 350 கிராம்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,
முந்திரி, திராட்சை - தலா 20
லவங்கம் - 8
டைமண்ட் கல்கண்டு - 20
பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 5,
பால் - ஒரு டீஸ்பூன்
கேசரி கலர் - சிறிதளவு.



செய்முறை:

முதலில் சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

எண்ணெய்யை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெய்யில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்த்து கொள்ள வேண்டும்.

முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் உருட்டி எடுத்து கொள்ள வேண்டும். அனைவருக்கும்  பிடித்தமான, சுவையான, இனிப்பான  லட்டு தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கொள்ளுவில் என்னென்ன சத்துக்கள் உள்ளது தெரியுமா...?