சுவையான முறையில் ரிப்பன் பக்கோடா செய்ய !!
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - ஒரு கிலோ
பச்சரிசி - கால் கிலோ
உப்பு - ஒரு தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய சுண்டைக்காய் அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் கடலை பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடலை பருப்புடன் அரிசியை சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் மாவில் இரண்டு கப் எடுத்துக் கொண்டு அதனுடன் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையில் ஊறவைத்த பெருங்காயத் தண்ணீரை ஊற்றி விட்டு மேலும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சற்று தளர்வாக பிசைந்துக் கொள்ளவும். உரலில் ஓலை பக்கோடாவிற்கு பிழிய பயன்படுத்தும் அச்சை போட்டு மாவை நிரப்பிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பிழிந்து விடவும். மற்றொரு பக்கம் திருப்பி விட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும். சுவையான மொறுமொறு ரிப்பன் பக்கோடா தயார்.