1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2026 (16:19 IST)

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

sun
கோடைக்காலம் என சொல்லப்படும் வெயில் காலம் வந்து விட்டாலே பல நோய்கள் மனிதர்களை தாக்கும்.. எனவே கோடையில் வரும் நோய்களிலிருந்து நம்மை எப்படி பாதுகாக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்;

கோடை காலங்களில் உடலில் உஷ்ணம் சேர்ந்து விடும். அதனால் நீர்ச்சத்து குறைந்துவிடும்.. எனவே அதிக தண்ணீர் குடிப்பது, இளநீர் குடிப்பது மோர் சாப்பிடுவது, எலுமிச்சை சாறு, தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்கும்.

வெயில் காலத்தில் குழந்தைகளை அம்மை நோய் தாக்கும்.. எனவே நம் இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.. அதோடு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்
. வெயில் காலத்தில் சிலருக்கு மஞ்சள் காமாலை நோய் வர வாய்ப்புண்டு.. எனவே அதை தவிர்ப்பதற்காக காய்ச்சிய நீரை பருகலாம். அதேபோல் நம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்..

வெயில் காலத்தில் பலருக்கும் சரும நோய்கள் வரும். எனவே அதை தவிர்ப்பதற்காக மெல்லிய பருத்தி ஆடைகளை அணியலாம்.. அதேபோல் தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

கோடை காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால் சமைத்தவுடன் சாப்பிடுவது நல்லது
. வெயில் காலங்களில் கண் தொடர்பான நோய்கள் நிறைய வரும்.. எனவே குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும்.. அதேபோல் வெயிலில் செல்ல நேரிடும் போது சன் கிளாஸ் அணியலாம்..

அதேபோல், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்..