1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வாஸ்து: சமையலறையை எந்த திசையில் இருக்குமாறு அமைக்கவேண்டும்...?

சமையலறையில் உணவு சமைப்பது என்பது பிரதான பணி. தென்கிழக்கு சமையலறைக்கு அடுப்பு என்பது தென்கிழக்கு சார்ந்த கிழக்கு பார்த்து சமைக்கும் அமைப்பு வேண்டும்.


வடமேற்கு சமையலறையில் அந்த அறையின், தென்கிழக்கு பகுதியில் கிழக்கு பார்த்து சமைக்க வேண்டும். 
 
ஒரு சில மக்கள் வடமேற்கு சமையல் அறையில் புகைபோக்கி அமைப்பு ஏற்படுத்துவதற்காக, வடமேற்கில் மேற்கு பார்த்து சமையல் அடுப்பு வைப்பார்கள். அது மிக  மிகத் தவறு ஆகும். ஒரு சமையலறையில் சமைக்கக்கூடிய நபர் கிழக்கு பார்த்து சமைத்தால் மிக அற்புதமான அமைப்பாக அமைந்துவிடும். 
 
ஒரு சமையலறையில் தெற்கு பார்த்து சமைக்கிறார்கள் என்று சொன்னால், அவ்வீட்டில் பெண்களுக்கு கஷ்டங்களைக் கொடுக்கும். அல்லது சமையல் அறையில் வடக்கு பார்த்து சமைக்கிறார்கள் என்று சொன்னால் கட்டாயமாக பணம் என்பது பற்றாக்குறை சார்ந்த வாழ்க்கை அமையும். 
 
மேற்கு பார்த்து சமைப்பது இரண்டாம் தலைமுறை வாரிசுகளுக்கு பாதிப்பினை கொடுக்கும். அடுத்தாக சமையலறையில் பாத்திரங்கள் விலக்க பயன்படுத்தும் இடம் என்பது அந்த அறையின் வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும். இது தென்கிழக்கு சமையலறைக்கும் நான் சொல்லக் கூடிய விஷயம் பொருந்தும். 
 
இதுவே வடமேற்கு சமையலறையாக இருக்கின்ற பட்சத்தில், வடக்கு சுவற்றில் கிழக்குப் பகுதியில் அமைக்க வேண்டும். அதாவது வடக்கு பார்த்து பாத்திரங்களை கழுவுவது போன்ற அமைப்பை ஏற்படுத்துவது நல்லது.