செவ்வாய், 7 ஏப்ரல் 2026
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2026 (12:33 IST)

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

bill paper
தற்போதெல்லாம் மனிதர்களுக்கு எதன் மூலம் எப்படி பிரச்சினைகள் வரும்? ஆபத்து வரும்? உடல்நிலை பாதிக்கும் என்றெல்லாம் கணிக்கவே முடியவில்லை.. அவசர வாழ்க்கையில் எல்லாமே அவசரமாக மாறிவிட்டது.. மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் பல பொருட்கள் மக்களுக்கு எதிராக திரும்பிவிட்டன.

ஏனெனில், மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வது எப்படி என்பதை மட்டுமே வியாபார நிறுவனங்கள் யோசிக்கிறதே தவிர இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு என அவர்கள் யோசிப்பதில்லை. மக்களின் ஆரோக்கியத்தின் மீது யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்நிலையில்தான் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல கடைகளில் பில் போடுவதற்காக பயன்படுத்தும் பேப்பர் ஆண்களுக்கு பெரிய பாதிப்பை தரும் என CENTER FOR ENVIRONMENTAL HEALTH தெரிவித்திருக்கிறது. இந்த தெர்மல் பேப்பரில் BISPHENOL A என்ற மிகவும் ஆபத்தான கெமிக்கல் இருக்கிறது.. அது ஹார்மோன்களை பாதிக்கும் எனவும் அதனால் ஆண்களின் விந்தணுக்கள் பாதிக்கப்படும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்..

ஏற்கனவே நிறைய ஹோட்டல்களில் உணவை மடித்து கொடுக்க பயன்படுத்தப்படும் SILVER FOIL PAPPER புற்றுநோயை வரவழைக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது..