1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2026 (14:13 IST)

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..
இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் போன் என்பது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பெரும்பாலான ஆண்கள் தங்களது கைபேசியை எளிதாக எடுத்து பயன்படுத்த ஏதுவாக பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால், இந்த எளிய பழக்கம் ஆண்களின் கருவுறுதல் திறனை வெகுவாகப் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 
இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன:
 
ஒன்று மொபைல் போன்கள் வெளியிடும் மின்காந்த கதிர்வீச்சுகள் விந்தணுக்களின் டிஎன்ஏ-வைச் சிதைக்கக்கூடும். இதனால் விந்தணுக்களின் தரம் மற்றும் நகரும் திறன் குறைகிறது. இரண்டாவதாக ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு உடல் வெப்பநிலையை விட 2-3°C குறைவான வெப்பநிலை அவசியம். ஆனால், நீண்ட நேரம் மொபைலை பாக்கெட்டில் வைத்திருப்பதால் ஏற்படும் வெப்பம், விதைப்பையின் வெப்பநிலையை அதிகரித்து விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது.
 
நல்ல செய்தி என்னவென்றால், விந்தணுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுவதால், இந்த பழக்கத்தை மாற்றிக்கொண்டால் பாதிப்புகளை தவிர்க்கலாம். 
 
மொபைல் போனை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதைத் தவிர்த்து, சட்டை பையிலோ அல்லது பையிலோ வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. 
 
 
Edited by Siva