சுவை மிக்க மைசூர் பாகு செய்ய !!

Mysore pak
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - இரண்டரை கப்
நெய் - 2 கப்

செய்முறை:
 
கடலை மாவை லேசாக வறுத்துக் கொள்ளவேண்டும். நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை கால் டம்பளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு வைக்க வேண்டும். கம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளற வேண்டும். 
 
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளற வேண்டும். இது பொங்கி பூத்து வரும்போது,  நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்த வேண்டும். ஆறிய பிறகு துண்டுகள் போடவேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :