1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. Make Healthy Drumstick flower soup...!

ஆரோக்கியம் தரும் முருங்கைப்பூ சூப் செய்ய...!

முருங்கைப் பூ சூப்
தேவையான பொருட்கள்:
 
முருங்கை பூ - 2 கைப்பிடி
புளி - சிறிய எலுமிச்சை பழ அளவு
தக்காளி - 1
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி (வேகவைத்த )
உப்பு - சுவைக்கு ஏற்ப
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
மிளகு - 1 தேக்கரண்டி ( தூளாக்கவும்)
சீரகம் - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
 
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிதளவு நீரில் கரைத்து அத்துடன் முருங்கை பூ, தக்காளி, ரசப்பொடி கலந்து நன்கு கொதிக்க வையுங்கள். அடுத்து அதில் பருப்பு கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தாளித்து சூப்பில் சேருங்கள். இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சூப்பாகவும் பருகலாம். சளி, இருமலுக்கு ஏற்றது.
அடுத்த கட்டுரையில்
உணவில் தினம் ஒரு கீரையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்!!