சுவையான காளான் குழம்பு செய்ய...?

Mushroom Kuzhambu
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
ஏலக்காய் - 3
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 1
செய்முறை:
 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ஏலக்காய் சீரகம் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக  வரும் வரை வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இஞ்சி மற்றும் பூண்டு விழுது அரைத்த எடுத்துக் கொண்டு  அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியாத் தூள் ஆகிவற்றை தேவையான அளவு எடுத்து வாணலியில் சேர்த்து வதக்கிக்  கொள்ளவும்.
 
இதனுடன் பச்சைமிளகாய், கருவேப்பிலை மற்றும் சிறியதாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். பிறகு காளான் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கடாயை மூடி வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான காளான் குழம்பு தயார்.


இதில் மேலும் படிக்கவும் :