வஞ்சிர மீன் வறுவல் செய்வது எப்படி...?

<a class=Vanjaram fish fry" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2019-10/30/full/1572436682-9349.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Sasikala|
தேவையான பொருட்கள்: 
 
வஞ்சிர மீன் - ஒரு கிலோ 
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக் கரண்டி 
மிளகாய் பொடி - தேவைக்கு ஏற்ப
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி 
எலுமிச்சை சாறு அல்லது சிறுது புளி கரைசல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை: 
 
மீன் துண்டுகளை நன்றாக அலசி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த மசாலா கலவையினை மீன் துண்டுகளில் பிரட்டி 30 நிமிடங்கள் ஊற  வைக்கவும். 
 
தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு அதில் மசாலா ஊறவைத்த மீன் துண்டுகளை போட்டு எண்ணெயில் பொறித்து எடுக்கவும். அதிகம் கருகிவிடாமல் சிம்மில் வைத்து இருபுறமும் பொறிக்கவும். சுவை மிகுந்த வஞ்சிர மீன் வறுவல் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :