வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (19:20 IST)

சுவை மிகுந்த அவல் கேசரி செய்ய !!

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
முந்திரி - 15
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்



செய்முறை:

அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும்.

அவல் வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால்,  சுவை மிகுந்த அவல் கேசரி தயார்.