வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (15:11 IST)

சூப்பரான சுவையில் இனிப்பு பொங்கல் செய்ய !!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கிலோ (ஊற வைத்து கழுவியது)
பாசிப்பருப்பு - 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)
பால் - 3/4 லிட்டர்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
வெல்லம் - 600 கிராம் (பொடியாக)
நெய் - 150 கிராம்
பச்சை கற்பூரம்- 1 சிறிதளவு (பொடியாக)
ஏலக்காய் பொடி- 1/2 டீஸ்பூன்.



செய்முறை:

பச்சரிசி மற்றும் பாசிபருப்பை சேர்த்துக் கழுவிவிடவும். குக்கரில் போட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

வெல்லத்தை உருக்க வேண்டும். பச்சரிசி வெந்ததும் உருக்கிய வெல்லத்தை அதில் ஊற்றிக் கிளறவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.பின் மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் வெல்லம் நன்குக் கலந்துவிடும்.

இறுதியாக மூன்று ஸ்பூன் நெய் விட்டு கால் கப் முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி பொங்கலில் கொட்டி கலக்கவும். சுவையான இனிப்பு  பொங்கல் தயார்.