1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (14:55 IST)

கொத்தவரங்காயில் பருப்பு உசிலி செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
கொத்தவரங்காய் - அரை கிலோ
துவரைபருப்பு - 50 கிராம்
கடலைபருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு -1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
கடுகு -1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கு
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:
 
கொத்தவரங்காயை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். துவரைபருப்பு, கடலைபருப்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். தண்ணீரை வடிகட்டி நீக்கிவிட்டு அத்தோடு காய்ந்த மிளகாய், சோம்பு போன்றவைகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனை இட்லி தட்டில் பத்து நிமிடம் வேகவைத்து ஆறிய பின்பு உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டிய பொருட்களை தாளிக்கவும். அதில் உதிர்த்து வைத்துள்ள பருப்பை கொட்டவும். கொத்தவரங்காயையும் சேர்த்து, உப்பு கலந்து வதக்கவும். சுவையான கொத்தவரங்காய் பருப்பு உசிலி தயார்.
 
குறிப்பு: கொத்தவரங்காயை தனியாக வேகவைத்தும் தாளிக்கலாம்.