வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2023 (09:39 IST)

சுண்டி இழுக்கும் தஞ்சாவூர் சாம்பார் செய்யலாமா?

Thanjavur Sambar
தமிழர்களின் சைவ உணவில் முக்கிய அம்சம் வகிப்பது சாம்பார். அதிலும் தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் வாசமும், ருசியும் நிறைந்தது. தஞ்சாவூர் சாம்பார் எளிதாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.


  • தேவையானவை: 1 கப் வேகவைத்த துவரம் பருப்பு, 2 தேக்கரண்டி சாம்பார் பொடி, 4 சேப்பங்கிழங்கு, கால் கப் சக்கரை வள்ளிக் கிழங்கு, புளிக்கரைசல்..
  • தேவையானவை: பரங்கிக்காய், கத்தரிக்காய், குடை மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், 1 தேக்கரண்டி அரிசி மாவு, உப்பு தேவையான அளவு
  • சேப்பங்கிழங்கை தனியே தோலை உரித்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
  • பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு காய்கறிகள், அவித்த சேப்பங்கிழங்கை போட்டு வதக்க வேண்டும்.
  • வதக்கிய பின்னர் அதில் புளிக்கரைசல், உப்பு, சாம்பார் போடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
  • பின்னர் அதில் துவரம் பருப்பு, அரிசி மாவு கரைசலை சேர்ர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்த்து கொதியுடன் இறக்கினால் மணமணக்கும் தஞ்சாவூர் சாம்பார் ரெடி.