திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (10:14 IST)

உடலுக்கு ஆரோக்கியம் தரும் "கேழ்வரகு ஸ்டப் இட்லி" செய்வது எப்படி?

இந்த டெக்னாலஜி உலகம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழைமையை  தலைமுறை உணவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் பாரம்பரியம் உணவுகளின் அரசனாக திகழும் கேழ்வரகு பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். மேலும், இதில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
 
கேழ்வரகு ஸ்டப் இட்லி செய்ய தேவையான பொருட்கள்: 
 
கேழ்வரகு மாவு - அரை கிலோ 
உளுந்து - 200 கிராம் 
கொண்டைக்கடலை - 100 கிராம் 
வெல்லம் - சிறிதளவு 
மிளகாய் வற்றல் - 4 
உப்பு தேவையான அளவு 
 
எவ்வாறு செய்யவேணும்?
 
கேழ்வரகு மாவில் உப்பு போட்டு சிறிது தண்ணீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கலந்து வைக்கவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்தெடுக்கவும். இத்துடன் கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். 
 
இதை முதல் நாள் இரவு செய்து வைக்கவும். கொண்டை கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் வேக வைத்து வடிகட்டி அத்துடன் மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும். 
 
இட்லி தட்டில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை அரைக்கரண்டி விட்டு அதன் மேல் ஒரு கல் கரண்டி கடலை விழுதைப் போடவும். மீண்டும் கால் கரண்டி கேழ்வரகு மாவு, உளுந்து கலவையை விட்டு இட்லியை வேக வைத்து எடுக்கவும். இப்போது மனமனக்கும் சுவையில் ஆரோக்கியமான கேழ்வரகு ஸ்டப் இட்லி ரெடி.