1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (10:23 IST)

குழந்தைகளுக்கு சத்தான முருங்கை அடை செய்வது எப்படி?

Murungai Adai
முருங்கை கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையை அடையாக செய்து சுவையாக குழந்தைகளுக்கு அளித்தால் நல்ல உணவாகவும், சத்து மிக்கதாகவும் இருக்கும். அதுகுறித்து பார்ப்போம்.



தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு, இளம் முருங்கைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு

பச்சரிசி மாவுடன் முருங்கை கீரையையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாக கீறிய பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் மிதமாக கலந்து நன்றாக பிசைய வேண்டும்.

மாவு சரியான பதத்திற்கு வந்த பின்பு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து அடையாக தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் தோசை கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு அடையாக போட்டு எடுக்க வேண்டும்.

அடை சுட்டு எடுக்க நல்லெண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்தலாம். பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாய் அல்லது அரைத்த சோம்பு பயன்படுத்தினால் வெவ்வேறு சுவை கிடைக்கும்.