1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

கொள்ளு உருண்டை காரக்குழம்பு செய்ய...!

தேவையானவை: 
 
கொள்ளு - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
துவரம்பருப்பு - 4 டீஸ்பூன்
கறுப்பு உளுந்து - 4 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 
செய்முறை: 
 
துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 
 
புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில்  வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.
 
குறிப்பு: கொள்ளு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும். குழம்பை சாதத்தில் போட்டு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ள வைத்துக் கொள்ளலாம். உருண்டையை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.