சுவையான ப்ரான் பாஸ்தா செய்ய...!

Sasikala|
தேவையானப் பொருட்கள்:
 
பாஸ்தா - ஒரு கப்
இறால் - கால் கப்
வெங்காயம் - 2
தக்காளி - 4 - 5
குடைமிளகாய் - ஒன்று
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2
சில்லி ஃப்ளேக்ஸ் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

 
செய்முறை: 
 
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து வைக்கவும். பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியின் தோல் நீக்கி தக்காளியை கூழாக அரைத்துக் கொள்ளவும்.
 
பாஸ்தாவை வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டுத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
 
வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு இறாலைச் சேர்த்து சில்லி ஃப்ளேக்ஸ் தூவி 2 நிமிடங்கள் கலந்துவிடவும். கடைசியாக வேக வைத்த பாஸ்தாவைச் சேர்த்து நன்கு ஒன்று சேரக் கிளறி இறக்கவும். சுவையான ப்ரான் பாஸ்தா தயார்.இதில் மேலும் படிக்கவும் :