திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (17:54 IST)

அசைவம் சாப்பிடாதவர்களுக்கே ‘கோல்ட் மெடல்’; பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு

அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மது அருந்தாதவர்களுக்கு மட்டுமே ‘கோல்ட் மெடல்’ வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


 

 
பல்கலைக்கழகத்தில் தங்க பதக்கம் பெற தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான மதிப்பெண்கள் பெறுவது மற்றும் பல்கலைக்கழக கல்வி நிகழ்வுகளில் பகேற்று திறனை வெளிப்படுத்துவது என்பது சிறந்த மாணவர்களுக்கு அவசியமானது. இதுவே அனைத்து பல்கலைக்கழகத்திலும் பின்பற்ற கூடிய ஒன்று. ஆனால் புனே பல்கலைக்கழகம் மேலும் சிலவற்றை இவையுடன் சேர்த்துள்ளது.
 
ஆதாவது, அசைவம் சாப்பிடாத மற்றும் மது அருந்தாத மாணவர்கள் மட்டுமே ‘கோல்ட் மெடல்’ பெற தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலாக பரவி வருகிறது.
 
இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செது வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் இதுபோன்ற புதிய அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.