புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் வல்லாரை கீரை...!!

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது.

குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு வாரமொருமுறை வல்லாரை கீரையை பக்குவம் செய்து சாப்பிட கொடுப்பதால் அவர்களின் மூளை செல்களின் வளர்ச்சி தூண்டப்பெற்று ஞாபகசக்தி மற்றும் சிந்தனை திறனை அதிகம் வளர்கிறது.
 
உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம  அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
 
வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கும். மேலும் பல் ஈறுகள் பலப்படும். கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.
 
யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும்.