வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (17:08 IST)

சுவை மிகுந்த வெங்காய சட்னியை எப்படி செய்வது...?

தேவையான பொருட்கள்:
 
வெங்காயம் - 3 (நறுக்கியது)
வரமிளகாய் - 8
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
பின்னர் அதில் பொட்டுக்கடலை, உப்பு, புளிச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி விட வேண்டும். பின்பு அதனை இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட வேண்டும்.

பின்னர் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்தால், சுவை மிகுந்த வெங்காய சட்னி தயார்.