1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 28 டிசம்பர் 2021 (17:49 IST)

சூப்பரான சுவையில் கோபி மஞ்சூரியன் செய்ய !!

தேவையான பொருட்கள் :
 
காலிப்ளவர் - 1 சிறியது
வெங்காயம் - பெரிதாக 2
பச்சை மிளகாய் - 10
சோளமாவு - 25 கிராம்
மைதா - 25 கிராம்
சோளமாவு - 25கிராம்
மிளகு - சிறிதளவு
சோயாசாஸ் - 5 மி.லி
எண்ணெய் - பொரித்தெடுக்க
பூண்டு - 10 கிராம்
ரெட்பவுடர் - கொஞ்சம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
முதலில் மாவு வகைகளை உப்பு , மிளகு , சோயா சாஸ் ஆகியவை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ளவும். காலிப்ளவரை தண்ணீரில் போட்டு கல் உப்பு சேர்த்து கொதிக்க விட அதில் உள்ள புழு பூச்சிகள் அகன்று சுத்தமாகி விடும். 
 
பின்னர் தண்ணீரை வடித்து துண்டுகளாக்கி கலந்து வைத்துள்ள மாவில் புரட்டி பின்னர் எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். பிரகு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
 
நன்கு வதக்கி வரும்பொழுது உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கி அதனுடன் பொரித்து வைத்துள்ள காலிப்ளவரை சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்கள் வேகவிட்டு பின்பு தேவையான அளவு சோளமாவை தண்ணீரில் கரைத்து இதில் சேர்த்து கொள்ளவும். சிறிது நேரத்தில் திக்காக வரும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்தால் சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.