1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (17:25 IST)

வீட்டிலேயே எளிதாக சிக்கன் பிரைடு ரைஸ் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 2 கப்
முட்டை - 1
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - அரை மேஜைக்கரண்டி
வெங்காய தாள் - சிறிதளவு
முட்டை கோஸ் - சிறிதளவு
கேரட் - சிறிதளவு
பீன்ஸ் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - அரை மேஜைக்கரண்டி
கரம் மசாலா - 1 மேஜைக்கரண்டி

செய்முறை:
 
மேற்குறிப்பிட்டுள்ள காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, பின்பு சாதமாக வடித்து கொள்ளவும்.
 
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும். பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
 
அதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும். சிக்கன் நன்கு வெந்ததும் வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை அதனுடன் சேர்த்து கொள்ளவும்.
 
பின்னர் மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு, மிளகாய்த்தூள், சோயாசாஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இவற்றை 5 நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும். இப்போது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாளை அதில் தூவி பரிமாறினால் சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார். இதற்கு  தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.