அனைவருக்கும் பிடித்த ரவா கேசரி செய்ய...!!

Rava Kesari
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
ரவை - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
சர்க்கரை - 1 3/4 கப்
நெய் - 3/4 கப்
கேசரி கலர் - சிறிதளவு
ஏலகாய் தூள் - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
கிஸ்மிஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை:
 
அடுப்பில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு 2  தேக்கரண்டிநெய் விட்டு ரவை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும்.
 
இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச்  சேர்த்துக் கிளறவும். ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
 
கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும். வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து விடவும்.  சுவையான ரவா கேசரி தயார்.


இதில் மேலும் படிக்கவும் :