சுவையான பால் பணியாரம் செய்ய...!!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 3
சர்க்கரை - 150 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் பச்சரிசி உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி 2 அலது 2 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு அதனை சிறிதளவு தண்ணீர் சிறிதளவு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்து வைக்கவும்.
அடுப்பில் பணியார கல் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து பணியாரக் கல்லில் ஊற்றவும். ஒரு பக்கம் சிவக்க வெந்தவுடன் மறுபுறம் திருப்பி சிவக்க வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும் ஏலத்தை பொடி செய்து சேர்த்துக்கொள்ளவும். இறுதியாக சர்க்கரையை சேர்த்து நன்றாக காய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும். பால் கொஞ்சம் ஆறியவுடன் சுடெடுத்த பணியாரங்களை அதனுடன் சேர்த்து ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.