திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவை தரும் குக்கர் ப்ளம் கேக் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
மைதா - 100 கிராம்
ஓமம் தூள் - அரை ஸ்பூன்
திராட்சை - 30 கிராம்
சுக்குத் தூள் - அரை ஸ்பூன்
வெண்ணெய் - 100 கிராம்
பால் - 1/4 கப்
சர்க்கரை - 100 கிராம்
சோள மாவு - 2 ஸ்பூன்
முந்திரி பிஸ்தா வால்நட் - 40 கிராம்
முட்டை - 3
செர்ரி பழம் நறுக்கியது - 50
செய்முறை:
 
சோளமாவை பாலில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழாக வேகவிட்டு வைக்கவும். கட்டி தட்டாமல் இருக்க வேண்டியது அவசியம். மைதாவை சலித்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்து அதையும் சலித்துக் கொள்ளவும்.

இரண்டையும் கலந்து கொண்டு வெண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். முட்டையை நுரை பொங்க அடித்து இந்த கலவையோடு சேர்த்து எல்லாவற்றையும் கேக்  மிக்சரில் போட்டு கலக்கவும்.
 
பட்டர் பேப்பர் தடவிய கேக் டின்னில் கேக் கலவையை பாதி ஊற்றவும். சிறு துண்டுகளாக நறுக்கிய செர்ரி பழங்களை போட்டு அதன் மீது  மீதி கலவையை ஊற்றவும். இந்த மாவு கலவையை வெண்ணெய் தடவிய குக்கர் பாத்திரத்தில் ஊற்றவும். அந்த பாத்திரத்தை குக்கரினுள்  வைத்து மூடி அடுப்பை சிம்மில் வைத்து 40 முதல் 45 நிமிடங்கள் வேகவிடவும். வெயிட், கேஸ்கட் போட தேவை இல்லை. சுவையான பிளம்  கேக் தயார்.