1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. Diwali Special: How to make a Thattai recipe...?

தீபாவளி ஸ்பெஷல்: கார தட்டை செய்வது எப்படி...?

Thattai
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப் அளவு
உளுத்தம் பருப்பு - 1/4 கப் (வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
கடலை பருப்பு - 4 டீஸ்பூன் (ஊறவைத்தது)
நுணுக்கிய பூண்டு - 10
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

2 கப் அளவு பச்சரிசியை, ஒரு கடாயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து ட்ரையாக வறுக்க வேண்டும். ஈரப்பதம் மாவில் இருக்கவே கூடாது. வறுத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். வறுத்து அரைத்த உளுத்த மாவு எடுத்து கொள்ளவும். வறுத்த மாவுகளை ஓர் தனி பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். வறுத்த மாவுகளுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, நுணுக்கிய பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார். இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதனை நன்கு பொரிக்கவும். இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்து எடுத்தால், சுவையான மற்றும் காரமான தட்டை தயார்.

Edited by Sasikala
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
எளிதாக கிடைக்கும் பூசணி விதையில் ஏராளமான நன்மைகள் !!