சுவையான வெண்ணெய் முறுக்கு செய்வது எப்படி....?
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 1/4 கப்
பொடியாக்கப்பட்ட கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
நீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெண்ணெய், சீரகம், பெருங்காயம், உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பின்பு பிசைந்த மாவை கொஞ்ச நேரம் அப்படியே மூடி வைத்து ஊற விட வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடு பண்ணவும். எண்ணெய் சூடானதும் பிசைந்த மாவை முறுக்கு பிழியும் அச்சில் வைத்து நம் தேவைக்கேற்ப பிழிந்து கொள்ளலாம்.
பிழிந்து வைத்துள்ள மாவை நன்கு காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொன்நிறம் ஆகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் நன்கு மொறு மொறுப்பான சுவையான வெண்ணெய் முறுக்கு தயார்.