வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை விரட்டும் பரிகாரங்கள்...!

எல்லா வீடுகளும் வாஸ்து விதிப்படி கட்டப்படுவதில்லை என்பதே எதார்த்தம். அப்படி சில வீடுகள் வாஸ்து விதிகள் பின்பற்றபடாமல் கட்டப்படுவதால், வீட்டிற்கு வாஸ்து தோஷம் ஏற்பட்டு அங்கு வசிப்பவர்களுக்கு பலவிதமான இன்னல்களை ஏற்படுத்துகிறது.
வீட்டில் இருக்கின்ற எதிர்மறை அதிர்வுகள் வெளியேறவும், வாஸ்து தோஷங்கள் நீங்கவும் வீட்டின் வாயிற்படியின் மேலாக ஒரு செம்பு கம்பியை நீளவாக்கில் கட்டி, அதில் புதிய மாவிலைகளை தோரணமாக கட்டி தொங்கவிட வேண்டும்.
 
வீட்டிற்கு வெளிப்புறமாக நெற்கதிர்களை கட்டவேண்டும். அவ்வாறு வீட்டில் கட்டப்பட்டிருக்கும் நெற்கதிர்களை பலவிதமான பறவைகள் வந்து சாப்பிடுவதால் அப்பறவைகள் தெய்வீக ஆற்றல்களை வீட்டிற்குள்ளாக கொண்டு வருகின்றன.
 
தினமும் காலையில் கிழக்கு நோக்கி தீபமேற்றி  “ஓம் நமோ வாஸ்து புருஷாய நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை ஜபியுங்கள்.
 
வீட்டின் மேற்குப்பகுதியில் நறுமணத்தைப் பரப்பும் ரோஜா, முல்லை, சம்பங்கி, மல்லி போன்ற மலர்ச் செடிகளை வளர்ப்பதால் வீட்டிற்குள்ளாக  தெய்வீக சக்திகளை வரவழைக்க செய்யும்.
 
வீட்டின் வடகிழக்கில் துளசி, நந்தியாவட்டை போன்ற பூச்செடிகள் வளர்க்கலாம். ஆண்டுக்கொருமுறை கணபதி ஹோமம் நடத்தினால் நல்லது. வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றலாம்.


இதில் மேலும் படிக்கவும் :