1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hardhik pandya talked about bumrah effect on team

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

ஐபிஎல்
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.   அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். அவர் 9 நான்கு, சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஆடிய குஜராத் அணியும் அதிரடியாக இலக்கைத் துரத்தியது. ஒரு கட்டத்தில் குஜராத் அணிக்கு வெற்றி வாய்ப்புப் பிரகாசமாக இருந்தது. ஆனால் இடையில் பும்ரா ஒரு ஓவர் வீசவந்து போட்டியின் தன்மையை மாற்றினார்.  இந்த ஓவர்தான் மும்பை அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில போட்டி முடிந்த பின்னர் பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிடம் “பும்ரா எப்போது பந்துவீச வேண்டும் என முடிவு செய்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு “மிகவும் எளிமையானது.போட்டி எப்போதெல்லாம் கைவிட்டுப் போகிறது என நினைக்கிறேனோ அப்போதெல்லாம் பும்ராவை பந்துவீச அழைப்பேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!