1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 31 மே 2025 (18:30 IST)

நீண்டநாள் தீராத நோய் தீர சனி ஹோரையில் வராகி அம்மனை வணங்குங்கள்..!

Varahi amman
சனி ஹோரையில், பஞ்சமி திதியும் சனிக்கிழமையும் கூடும் நாளில், வராகி அம்மனை வணங்குவது மிகவும் நன்மை தரக்கூடியதாகும். நாள்தோறும் வழிபடலாம்; ஆனால் இந்நாள் சிறப்பானது. ஏனென்றால், வராகி அம்மன் சனியின் கடுமையான விளைவுகளை குறைத்து, நமக்குள் புதிதாக ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தி கொண்டவள்.
 
இன்று உங்கள் வீட்டில் இருக்கிற ஒருவருக்கு நீண்டநாள் தீராத நோய் இருக்கலாம், குடும்பத்தில் வருமானம் இல்லை என்றே நிலைமை இருக்கலாம். இந்நிலையில் ஒருமுறை நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து, அதனை வராகி அம்மனாக நினைத்து வழிபடுங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் மாற்றம் நிகழும். நலன் நிச்சயம் உங்களை நாடி வரும்.
 
சனிக்கிழமைகளில், சனி ஹோரையில் வராகி அம்மனை வழிபட சிறந்தது. அம்மனின் படம் இல்லையெனில், சிறிது மஞ்சளில் பன்னீர் கலந்து, பிள்ளையார் வடிவில் செய்து, அதனை வராகியாக கொண்டு வழிபடலாம். பூ அலங்காரம் செய்ய சாமான்யமாக கிடைக்கும் சங்குப்பூ அல்லது அரளிப்பூ போதும். மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி, வெண் கடுகு சேர்த்து தீபம் ஏற்றி, ஒரு டம்ளர் பானகம் நைவேத்யமாக வைத்து வழிபடுங்கள்.
 
இவ்வாறு வாரம் தோறும் இந்த வழிபாட்டைச் செய்தால், கடன்கள், வறுமை, நோய்கள், தடைகள் அனைத்தும் விலகி, தைரியம், நம்பிக்கை, வளம் ஆகியவை பெருகும்.
    
Edited by Mahendran