செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 31 மே 2025 (11:43 IST)

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!
பாகிஸ்தானை குறிவைத்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணியில் வெளியான கொலம்பியாவின் இரங்கல் அறிக்கை, தற்போது  வாபஸ் பெறப்பட்டுள்ளது.
 
தென் அமெரிக்காவைச் சேர்ந்த கொலம்பியாவில் சுற்றுப்பயணமாக சென்றிருந்த சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, உரிய விளக்கம் அளித்ததை தொடர்ந்து, கொலம்பியா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கொலம்பியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ, “இப்போது எங்களுக்கு உண்மையான நிலைமை குறித்து தெளிவு ஏற்பட்டுள்ளது. இந்த உரையாடல்கள் எதிர்காலத்தில் தொடரும்,” எனக் குறிப்பிட்டார்.
 
இதையடுத்து, பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, கொலம்பியாவின் முடிவை வரவேற்று, பயங்கரவாதிகளுக்கும் சீராக இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் சமவெளி காண்பது ஏற்கத்தக்கது அல்ல என்று வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran